Friday, September 24, 2010

இயற்கை...

பார்க்க நினைத்து
பார்க்காமல் போனாலும்
வர்ணித்து கவிபாட
கவிஞர்கள் பலரிருக்க...
உன்னை கண்டுபின்
ரசித்துக்கொண்டே மகிழ்ந்த
உன்னழகினை நான்
சொல்லாமல் போனாலே
உன்னை விரும்பியது - உண்மையில்
பொய்யாய் போய்விடும்...

புறவழிச்சாலை என்றாலே
ஊருக்கு வெளிப்புறமாய்
பிரித்த அகலபாதையாய்
செல்வதற்கும் வருவதற்கும்
தனித்தனி புறமென
பரந்து விரிந்திருக்க
நீயும் புடைசூழ்ந்திருக்க
பயணத்தின் வேகத்தில்
உள்ளமும் மகிழ்ந்திடும் - செல்லும்
தூரமும் குறைந்திடும்...

இன்பமான அத்தருணத்தில்
மனதினை கொள்ளைக்கொள்ளும்
காட்சியாய் வனப்பென
கண்டதை வார்த்தையால்
சொல்லியும் தீராத
வியப்பாய் விசித்திரமாய்
விந்தையாய் வேடிக்கையாய் - நீ
என்னுள் இக்கணமும்...

இல்லாளின் தலைபோல்
இருகூறாய் வானில்நீ!
ஒருகையின் பக்கம்
உன்னை மேல்நோக்கி
 உற்று பார்த்தேன்
வெள்ளைநிற காகித்தில்
சிறுபுள்ளியாய் இருந்தாலும்
கண்ணில்பட்டு மறையாத
கருமையாய் அல்லாது
நீலநிற வானத்தையே
கருநிற மேககூட்டத்தால் - எங்கும்
காணாது செய்ந்திருந்தாய்...

மறுகையின் பக்கம்
தலைசாய்த்து உன்னை
காணாது கண்டேன்
மனதுக்குள் மலைப்புதான்!
நீலநிற கடலில்
பொங்கிவரும் நுரைபோல்
வெண்ணிற முகில்கள்
அங்கெங்கே ஒன்றாய்தவழ
வானும்கடலும் ஒன்றென - எந்தன்
பார்வையில் நிறைந்திருந்தாய்...

மிதவேக பயணத்தில்
இதமாய் காற்றும்
பேருந்துக்குள் வீசியிருக்க!
வசந்தகாலத்தில் பூக்கதொடங்கிய
மரங்கள் பலவண்ணங்களில்
செறிவை அள்ளிதந்திருக்க!!
எனைபார்த்து அவைசிரிக்க
இளந்தென்றலாய் என்மேனியில்
மோதிவிட அதனிலும் - கண்மூடி
நான் மயங்கியிருக்க!!!

இதுவரை!
பார்த்திடாத முகத்துடன்
பகிர்ந்துக்கொண்ட விசயங்கள்
பலநூறு இருக்க
பார்த்திட்ட உன்னழகை
பங்குபோட்டு சொல்லி
பேசிமுடிக்கும் முன்பே - எனது
பயணம் முடிந்திருக்க...

இயற்கையே!!
மயக்கும் பாதையாய்
இன்று என்னுள்நீ
மறக்காத பொழுதாய்
இன்றும் என்றும்நீ
நீயுமென் காதலிதான் - நான்
மண்ணில் மடியும்வரை...

8 comments:

vetrithirumagal said...

அன்பரே,
நலம், நலம் அறிய ஆவல்,
நன்றி!இயற்கை கண் முன் கொண்டு வந்ததற்கு!இதனிலும் காதல் கலந்திரூ ந்தாலும் ரசிக்கவே தோன்றுகிறது .இயற்கை ஐ ரசித்தாலும் வார்த்தைகளில் கொண்டு வருவதிலும்,படிபோருக்கும் அதை கண் முன் கொண்டு வருவதில் வென்று உள்ளிர்கள்.தொடருட்டும் உங்கள் பணி.அன்புடன்

சரவணன்.D said...

அருமை//
நன்றி நண்பரே!!!

ஆதிரா said...

உன்னுடன் பயணித்த அனுபவம் .....என்னுள்
கண்டதை வார்த்தையால்
சொல்லியும் தீராத
வியப்பாய் விசித்திரமாய்
விந்தையாய் வேடிக்கையாய் - நீ
என்னுள் இக்கணமும்...
இதைத்தவிர வேறென்ன சொல்வேன் என் அன்பான நண்பனே...இயற்கையின் காதலனே...இவ்வுலக நேசனே..

Anonymous said...

வாசன் உங்களின் இயற்க்கை கவிதை உண்மையிலேயே அனுபவித்து எழுதியவை..படிப்பவர்களையே காதல் கொள்ளவைக்கும்...ஆம்...இயற்க்கையின் ஊடே பயணிப்பதே ஒரு சுகம்..மனமெல்லாம் சிற‌கடித்து பறக்கும்...எங்கு நோக்கினும் இயற்க்கையின் கைவண்ணம்...கலர் கலராய்....ஓவியமாய்...

அனுபவித்து ஒரு கவிதை...என்ன சொல்ல கொல்லைகொண்டது...அதிலும் அந்த கடைசி நான்கு வரிகள்....இயற்க்கையின் மேல் உள்ள உங்களின் ஈடுப்பாட்டை வெளிப்படுத்திருக்கிறது...pon..

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

நலம். நலமறிந்ததில் மகிழ்ச்சி...

மிக்க நன்றி... இயற்கையை என்னோடு, கேட்டு, படித்து, கண்ட மகிழ்ச்சியை இங்கே பகிர்ந்துக்கொண்டதற்கு...

பிரிவதில்லை காதல்....அதுவே என் வாழ்தல்...

என் பணிக்கு தங்களின் ஊக்கமும், இங்கே தொடர்ச்சியான வரவும் என்றும் இவன் நாடி...

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள சரவணன்,

மிக்க நன்றி தோழா... தங்களின் இனிய வரவிற்கும் மற்றும் பின்னூட்டத்திற்கும்.

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள பொன்,

இயற்கை மீதான தங்களின் பார்வைக்கும், என் எழுத்தின் மீதான பார்வைக்கும் பாலமாய் ஒன்றிணைத்து வெளிபடுத்திற்கும் தங்களின் மனதிற்கும் மிக்க நன்றி...

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள ஆதிரா,

என்னுடன் தங்களையும் உடன் அழைத்து சென்றதில் மகிழ்ச்சி... அருகினில் இல்லாமல் தொலைவினில் இருந்தாலும் மனதுக்குள் சுகமாய் உங்களின் பின்னூட்டத்தை படித்ததில்...

கொண்ட காதல் அழிவதில்லை என்றும்.