நேற்று...
உன்வீட்டில் தூத்தம்!!!
இன்று...
என்வீட்டில் தீர்த்தம்!!!
உன்வீட்டில் பிடித்துவந்த தண்ணீரை
தினமும் நான் தீர்த்தமாய்
நினைத்து குடிக்கின்றேன் என்வீட்டில்...
மற்றவர்களுக்கு வேண்டுமானல் அது
தாகம் தணிக்கும் தண்ணீர்தான்.
ஆனால்
அது எனக்கு உயிரை
காக்கும் கொடுக்கும் திரவமாய்...
உந்தன் கைகளினால் எனக்கு
அன்போடும் ஆசையோடும் அருளியதாலும்...
14 comments:
தண்ணீருக்குள் காதல் அருமை.. வாழ்த்துக்கள்
அன்புள்ள சரவணன்,
தங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சரவணன்...
எனக்கு அவள் தந்த தண்ணீருடன் காதல்...
சிலருக்கு அவள் தந்த/தரும் கண்ணீருடன் காதல்...
பார்க்கும் பொருட்களின் மீதும் காதல்...
பார்க்கும் மனிதர்களின் மீதும் காதல்...
நான் காதல் மீது காதல் கொண்டதால் எல்லாமே காதலாய் எனக்கு...
அழகான வரிகள்
அன்புள்ள சிநேகிதி,
மிக்க மகிழ்ச்சி....
நோன்பு எல்லாம் நல்லபடியாக இறைவன் திருவருளால் நடந்தேறிருக்கும் என் நம்புக்கின்றேன்...
இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துகள்.
எளிமையான வரிகள்.. அருமையான கருத்துகள்.. நல்லா இருக்கு..
நலம் தானே தோழர் ...
எத்துணை பருகினாலும் தீராதது தானே காதலின் தாகம் ....
அன்புள்ள ஆவி,
மிக்க நன்றி என் வலைபக்கம் மீதான தங்களின் மறுபடியுமான இனிய பயணத்திற்கு...வரவிற்கு...
அன்புள்ள நியோ,
வணக்கம் தோழரே...
நலம். நலமறிய ஆவல்.
நேற்றுதான் உங்கள் வலைபக்கம் சற்று உலா வந்தேன்..
இன்று நீங்கள் என்வலைபக்கம் உலா வந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.
காதல் மீது கொண்ட தாகம் தீராது போகின்றது என்றுமே...
கண்ணீரை மாற்றி ப்ன்னீர் தெளித்துவிடும் வாசன் உங்களின் தண்ணீர்க் கவிதை அவள் மனதில். உங்கள் கவிதையில் வாழும் அந்த தேவதை கொடுத்து வைத்தவள்..
அன்புள்ள ஆதிரா,
தண்ணீரை பன்னீராக மாற்றும் மந்திரம் தெரிந்த அந்த தேவதை என் மனத்தில் குடியேறி என்னுள் என்றும் என்னுயிராய் வாழவேண்டும் என்பதே அந்த தேவதையிடம் நான் வேண்டும் அன்பு வேண்டுகோள் என்றென்றும்...
மிக்க நன்றி !!! தேவதையிடம் படித்து காட்டுகின்றேன் உங்கள் மறுமொழியை தண்ணீர் அருந்தும் தருணங்களில்...
ஈரம் படம் பார்த்தீர்களா?
நான் காதல் மீது காதல் கொண்டதால் எல்லாமே காதலாய் எனக்கு...
oh....puthiyathaai...
தண்ணீர் அருந்தும் தருணங்களில்..
ethanaimurai arunthinaalu athanai muraiyum..vanthupokum intha varikal
pon
அன்புள்ள வெற்றிதிருமகள்,
ஈரம் படத்தின் விசயம் என்னவோ?
அன்புள்ள பொன்,
மிக்க நன்றி....
Post a Comment