Wednesday, September 22, 2010

இறப்பும்... பதிலும்...


ஒருவேளை உனக்குமுன் நான்
இறந்து போனால் நீவந்து
என்னை பார்க்க வருவயா?
இதுதான் என்னுடைய பதிலாய்
உன்கேள்விக்கு அளிக்க நினைத்தது - உன்னிடம்
கேட்காமல் போயிருந்தாலும் என்மனதுக்குள்....


நீவரமால் போககூடும் நானறிவேன்...
காரணம்?
என்னை பார்க்கவே பிடிக்காமலோ
என்சடலத்தை பார்க்க பிடிக்காமலோ
அல்ல..
என்மரண செய்தியை கேட்ட
உன்னிதயம் துடிக்க மறக்ககூடும்
அதனால் உன்நினைவை நீயிழந்து
என்னை காணாமல் போககூடும் - என்பதனை
என்சடலமும் அறியும் நானுமறிவேன்...

ஒருவேளை எனக்குமுன் நீஇறந்தால்...
கண்டிப்பாக உன்னையும் உன்கோலத்தையும்
காண நானும் வரமாட்டேன்...
காரணம்?
என்னுயிர் என்னுடலில் இருந்தால்
தானே வந்து உனைபார்ப்பதற்கு...
ஆனால்
என்னுயிராகிய உன்னை காண  - எங்கிருந்தாலும்
என்னுயிர் வந்துசேரும் நீயுமறிவாய்...

6 comments:

vetrithirumagal said...

அன்புள்ள வாசன் அவர்களுக்கு ,

வெற்றி திருமகள் வரைவது ,நலம் நலம் அறிய ஆவல் .தங்களுடைய கவிதைகளை சுவைக்க துவங்கிய புதிய வாசகி நான் .முதலில் மன இறுக்கத துக்கு இளைப்பாற இணைய தளத்திற்கு வந்தேன் ஆனால் தங்களின் கவிதைகளை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதமாக உங்கள் கவிதை சுவை கண்டவுடன் இணையத்திலயே மெய் மறந்து நிற்கிறேன் தங்கள் கவிதைகளின் நயமும் நடையும் அற்புதம் ஆனால் நீங்கள் காதல் எனும் குறுகிய களத்தில் ஏன் சுழல்கிறிர்கள் அதையும் தாண்டி வரலாமே உங்களை போன்ற இளையவர்கள் சேவை மாநிலம் தேசம் கண்டம் விட்டு பயணிக்கும் போது மனம் களிக்கிறது .எனக்கு கிடைத்த அனைத்தும் முத்துக்கள் .தமிழின் பசி கொண்டவரும், ,திங்களின் ஒளி,மனதில் பதிந்த ஓவியமும், அ(ம )மைதியா னவரும்,வெற்றி மகனும் யாரை சொல்வது யாரை விடுவது? தங்கள் பதிலை எதிர்பார்த்து என்றும் வெற்றி திருமகள்

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள வெற்றி திருமகள் அவர்களுக்கு,

வணக்கம்.

நலம். தங்களின் நலமறிந்ததில் மிக்க மகிழ்ச்சி...

என்னுடைய கவிதை என்ற ஒன்றுக்கு நீங்களும் புதிய வாசகியாய் எனக்கு கிடைத்திருப்பது ஆனந்தம். சிலர் பார்வையாளராய் வந்து போனாலே மகிழும் மனதிற்கு வாசகி என்ற வார்த்தையை படிக்கும் சமயம் மனத்திற்குள் திகட்டாத சுவையை அள்ளி தருகின்றது.

தங்களின் மன இறுக்கத்தை சில மணிதுளிகளாவது இங்கே உலா வந்த வேளையில் என்னால் தங்களுக்கு உண்மையில் இறுக்கம் தவிர்க்கும் வகையில் அளித்திருப்பேன் என்றால் மேலும் மகிழ்ச்சிதான்.

இணையத்தில் நீங்கள் மெய் மறந்ததைவிட, அந்த கனங்களில் உங்கள் மன இறுக்கம் தளர்ந்து நீங்கள் மகிழ்ந்திருக்க கூடும் என்பதை எண்ணி மனம் மகிழ்கின்றேன்...

காதலை தாண்டி எத்தனையோ விடைங்கள் இவ்வுலகில் இருக்கின்றன நிதர்சனமாய் நீங்கள் கூறுவதை போல். காதலே உலகமென வாழ்ந்ததனாலோ அல்லது காதலர்கள் இன்றும் அவ்வாறு வாழ்வதனாலோ அதிலிருந்து வெளிவர முடியாமல் அகப்பட்டு பல நேரங்களில் நானும்...

மகிழ்ச்சியாய் கண்டம் விட்டு கண்டம் வரும் பறவையை போல் நம்மின் எழுத்துகள் கண்டம் விட்டு கண்டம் சென்று மற்றவர்களால் சுவைக்கபடின் அதனை பார்த்து மனம் என்றென்றும் இன்புறும் என்பது மறுக்க முடியாத ஒன்று.

தங்களுக்கு கிடைத்த எத்தனையோ முத்துகளில் நானும் ஒருவன் என்றால் சந்தோஷம்.


// தமிழின் பசி கொண்டவரும், திங்களின் ஒளி,மனதில் பதிந்த ஓவியமும், ம(அமை)தியானவரும், வெற்றி மகனும் யாரை சொல்வது யாரை விடுவது? //

நீங்கள் குறிப்பிட நினைக்கும் அனைத்து வெற்றி மகன்களுக்கும் எந்தன் வாழ்த்துகளும்...

மிக்க நன்றி... எங்களை(என்னை) வெற்றி திருமகனாக்க நினைக்கும் தங்களின் அன்பான மனத்திற்கும் தங்களுக்கும்...

அன்புடன்,
தஞ்சை.வாசன்
srinihasan@gmail.com
(முட்டைக்குள்ளிருந்து வெளிபடும் உயிரை போல் வெளிவர துடித்துக்கொண்டு)

ஆதிரா said...

”புணர்ச்சிப் பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”
ஒத்த உணர்வு என்ற அடித்தளத்தில் அமைந்த காதலும் நட்பும் இப்படித்தான் பேசச்செய்யும். வாழவும் செய்யும். தாங்களின் இக்கவி நட்புக்காகவெனின் மீண்டும் ஆந்தையாரும் கோப்பொருஞ் சோழனும், ஒளவையும் அதியனும். காத்லுக்கென்றால் மீண்டும் அமராவதி அம்பிகாபதி. உதாரன் அமுதவல்லி. உண்மை உணர்வில் வாழும் எதுவும் வெற்றி பெறும்..வாழ்த்துக்கள் வாசன்.

Anonymous said...

சொல்ல ஒன்றும் இல்லை அழுகை வந்தது...pon..

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள ஆதிரா,

நான் கொண்ட நட்பும், நான் கொண்ட காதலும் என்றும் என்னை விட்டு பிரியாமல்...
வாழ்வில் உடலை விட்டு உயிர் பிரியாவிடினும் உயிரை இழந்து வாழும் தருணங்கள் கலந்தே...

மிக்க நன்றி தங்களின் மேற்கோளுடன் கூடிய நட்புக்கும் காதலுக்கும் அடிப்படையான அன்பினை வெளிக்காட்டி வாழ்த்தியமைக்கு...

தஞ்சை.வாசன் said...

அன்புள்ள பொன்,

தங்களை கண்கலங்க வைத்தமைக்கு மிகவும் வருந்துகின்றேன்...

மிக்க நன்றி...