Monday, September 13, 2010

யார் குற்றவாளி?

வீசியது தென்றல்
விலகியது உன்னாடை
உனையறியாமல்…

விலகியது உன்னாடை
வீழ்(விழு)ந்தது என்கண்கள்
எனையறியாமல்…

இங்கே யார் குற்றாவளி?
மெல்லிய தென்றலை வீசிய காற்றா?
விலகுமளவு ஆடை சூடிய நீயா?
மீளாத பார்வையில் சிக்கிய நானா?

நீ சொல்கின்றாய்
நான் குற்றவாளியென்று…

காற்று சொல்கின்றது
உன்னாடையும்
என்பார்வையும் குற்றவாளியென்று.

நான் சொல்கின்றேன்
காற்றாய்வீசி உன்னை
வருத்தாமல்...
தென்றலாய் தீண்டியதனால்
குற்றவாளி காற்றல்ல….

உன்மேனிக்கு ஆடையே
பாரமென்று…
சுமைகுறைக்க விலகியதனால்
குற்றவாளி நீயுமல்ல…

அப்படியென்றால்
குற்றவாளி நான்தானே?
இல்லையடி! பெண்ணே!!
இல்லை…
வீசும் தென்றலினால்
மயங்கி திரும்பியவன் - எதிர்பாராது
காணாத உன்னழகில்
மீளாது போனேன்…

இப்பொழுது சொல்
நானா குற்றவாளி?

8 comments:

கமலேஷ் said...

"குஷி" -படம் சமீபத்துல பார்தீங்களா என்ன நண்பா...
இல்லை கவிதைல அந்த தாக்கம் தெரியுதே அதான் கேட்டேன்.

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள கமலேஷ்,

நலமா?

உண்மையில் நான் படம் பார்க்க வில்லை நண்பா...

உங்களை போன்றே மற்ற ஒரு நண்பரும் என்னிடம் சொன்னார்கள்...

இது நான் கண்ட காட்சியை வைத்து எழுதியது....

அதன் தாக்கம் தான்...
படத்தின் தாக்கமென படத்தை பார்த்தபின்பு தான் உறுதியாய் என்னால் சொல்ல இயலும்...

நன்றி நண்பா தங்களின் கருத்திற்கு...

விநாயகதாசன் said...

நான் இட நினைத்ததை
கமலேஷ் இட்டுவிட்டார்

ஆடை விலகளை
சிலைகள் மறைப்பதில்லை
ஆதலின் அவள் சிலை
கண்கள் நிரைக்கும் அழகை
கலைஞன் வெறுப்பதில்லை
ஆதலின் நீ கலைஞன்

Aathira mullai said...

பெண்ணைப் படைத்து கண்ணைப் படைத்து (கள்ளப்பார்வை) காற்றையும் படைத்த இறைவனே குற்ற்வாளி...வாசன் ரசிகன் இல்லவே இல்ல..

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள விநாயகதாசன்,

தங்களின் முதல்முதலான இனிய வரவிற்கு என் வணக்கமும் மகிழ்ச்சியும்.

தொடர்ந்து தங்களின் வரவை எதிர்நோக்கி என்றும்...

என் தோழர் கமலேஷ் கூறியதை போல் மற்றும் ஒரு நண்பரும் கூறினார்... நீங்களும் கூறியிருப்பதை நான் ஏற்றுக்கொள்ளவேண்டும்...

தங்களின் இனிய வார்த்தைகள் நிறைந்த கவிதை பின்னூட்டத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள ஆதிரா,

ஆண்களையும், பெண்களையும் மற்றும் இயற்கையையும் படைத்த இறைவன் மேல் பழியிட்டு என்னை ரசிகன் ஆக்கிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்...

vetrithirumagal said...

excellant lyrics

Thanjai Vasan (தஞ்சை.வாசன்) said...

அன்புள்ள வெற்றிதிருமகள்,

மிக்க நன்றி...