எல்லா ஊடகத்தின்
வழியிலும் உன்நிலை
சொல்கின்றோம்...
உன்னை காப்பதற்கு
மாற்று பலவழிகளை
சிந்திக்கின்றோம்...
அழிந்துபோகும் உன்னை
அழியாமல் காக்க
துடிக்கின்றோம்...
இன்று!
நீயுண்பதை அளிக்காமல்
மாற்று உணவை
அளிக்கின்றோம்...
விலங்கென்றால் பயமில்லை
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...
உன்னுயிரை காக்கவும்
பிறஉயிரை அழிக்கவும்
தவிக்கின்றோம்...
மனிதர்கள் கொல்வதை
தடுக்க முடியாமல் - உனைமட்டும்
பகைக்கின்றோம்...
6 comments:
அருமையான சமுதாயச் சிந்தனைக் கவிதை வாசன். அரசும் இது குறித்து ஆவன செய்து கொண்டுதான் இருக்கிறது. அடுத்த கவிதையில் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்றும் கூறினால் நன்றாக இருக்கும்.. பலியாகும் புலியினம் குறித்த வருத்தத்துடன்..சிந்தனைக்கு வாழ்த்தைக் கூறுகிறேன்..
excellant initiation
மனிதர்கள் நாங்கள்
நீங்களாய் மாறிக்கொண்டு
வருகின்றோம்...
nice....very facts..
manithanai mirukamaakkuvathu ethu???? pon...
அன்புள்ள ஆதிரா,
மிக்க மகிழ்ச்சி... என் சிந்தனை குறித்த தங்களின் பதில் பின்னூட்டத்திற்கு...
தங்களின் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முயல்கிறேன்...
மிக்க நன்றி...
அன்புள்ள வெற்றி திருமகளுக்கு,
ஒரு வரி என்றாலும்... என்னை மாற்றி வெளி உலகை நான் காண முனையும் எண்ணத்துடன்...
மிக்க நன்றி... தங்களின் வரவை என்றும் இவன் நாடி...
அன்புள்ள பொன்,
மிக்க நன்றி...
மனிதனை மிருகம் ஆக்குவது ஆசையும் & சுயநலமும் தான்...
இது என் கருத்து)
Post a Comment